ஸ்ரீபெரும்புதூரில் மொய்தீன் 35 வயது என்ற நபர் சிவன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஏசி மெக்கானிக் இவருக்கு ட்ரோன் கேமரா வாங்க வேண்டும் என்பதால் பிலிப்கார்ட் செயலியில் 790,64 ரூபாய்க்கு ஒரு ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்துள்ளார்.
இந்த கேமராவை அவர் வாங்க கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி ஆர்டரை பிளேஸ் செய்துள்ளார். இன்று அவருக்கு பார்சல் டெலிவரி ஆகியுள்ளது. டோன் கேமரா கணமாக இருக்குமே இது என்ன மிகவும் லேசாக இருக்கிறது என்று அவர் சந்தேகத்துடன் பிரித்துப் பார்த்துள்ளார்.
பிரிக்கும்போதே உஷாராக அவர் வீடியோவும் எடுத்துள்ளார். அப்பொழுது அந்த பார்சலில் அவருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் சைனா கார் ஒன்று இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனக்கு டெலிவரி செய்த டெலிவரி பாய்க்கு கால் செய்ய அவர் போனை எடுக்கவில்லை.
உடனே பிளிப்கார்டுக்கு அவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மேல் நடவடிக்கை எடுப்பதாக flipkart நிறுவனம் கூறியுள்ளது. என்று அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.