கடலுக்கடியில் வெடித்த எரிமலை – பசிபிக் பெருங்கடலில் உருவான தீவு!

பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா தீவுகளில் அமைந்துள்ள இந்த எரிமலை, நீராவி மற்றும் சாம்பல் ஆகியவற்றைக் கக்கத் தொடங்கியது.

அவை கடலில் கலந்து நீரின் நிறத்தை மாற்றி விட்டன. இந்த எரிமலை வெடித்த 11 மணி நேரத்திற்குப் பிறகு, பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் இருந்து வெளிப்பட்டது என்று நாசா புவி கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

செயற்கைக்கோள்கள் மூலம் இத்தீவின் படங்களை நாசா படம் பிடித்துள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று இத்தீவின் பரப்பளவு 4,000 சதுர மீட்டர் (1 ஏக்கர்) மற்றும் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் (33 அடி) உயரத்தில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள், இந்த தீவு 24,000 சதுர மீட்டர் (6 ஏக்கர்) பரப்பளவாக பெருகி விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதி…. கலக்கும் நித்தி!

நீருக்கடியில் அமைந்துள்ள நீர்மூழ்கி எரிமலைகள் வெடித்து சிதறும் போது உருவாக்கப்பட்ட தீவுகள் போன்ற அமைப்பு பெரும்பாலும் குறுகிய காலமே நீடித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 1995 ஆம் ஆண்டில், கடலில் அமைந்துள்ள லேடிகி என்ற எரிமலை வெடிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு தீவு 25 ஆண்டுகளாக அழியாமல் இருந்தது.

லேடிகி எரிமலை வெடிப்பால் 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தீவு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீரில் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.