எதிர்வரும் 28 ஆம் திகதி சர்வதேச தகவலறியும் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கந்தளாய் ஆயிஷா மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று நடைபெற்றது.
தகவல்கள் மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளில் வகிக்கும் வகிபாகம், தகவல் வகை, தகவல் சட்டத்தின் வரலாறு, இலங்கையும் தகவல் சட்டமும், தகவல் சட்டத்தின் முக்கியத்துவம் உட்பட பல விடயங்களை உள்ளடக்கி மாணவர்களுக்கு ஏற்புடைய அடிப்படையில் இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் தகவல் சட்டம் தொடர்பான வழிகாட்டி கையேடும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.