சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு 48 வயது பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் 20 ஆண்டுகளுக்கு முன் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அவரை பிரிந்து பிறந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அவருடைய இளைய சகோதரர் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தனது சொந்த அக்கா என்றும் பார்க்காமல் அந்த திருமணமாகாத தம்பி அக்காவிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த தொல்லை அதிகரித்து அக்காவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த தொல்லை அதிகரித்ததால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவருக்கு தனது சொந்த சகோதரனால் பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.