தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது 10 நாட்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் நேற்று 538 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 51 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 446 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. எனினும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 395 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.