பாராளுமன்ற தீர்மானத்தின் மூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய பேரவையின்’ அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ‘தேசிய பேரவை’க்கு பெயரிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியல் சபாநாயகரினால் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.