புதுடில்லி,:ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர், தங்களை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதே வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினர். இந்த மனு மீது, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடில்லி,:ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்