சிம்லா, :ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து ஏழு பேர் உயிரிழந்தனர்.புதுடில்லி, உ.பி., ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த 17 பேர், வேன் ஒன்றில் ஹிமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா வந்திருந்தனர். இதில், மூன்று பேர் உ.பி., மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஐ.ஐ.டி., மாணவர்கள்.நேற்று முன்தினம் இரவு, குல்லு மாவட்டம் கியாகி என்ற இடத்தில் உள்ள மலைப் பகுதியில் வேன் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஐந்து பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்; காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 10 பேருக்கு குல்லு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்தில் உயிரிழந்தோருக்கு ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பஞ்சார் தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., சுரேந்தர் ஷோரி, நள்ளிரவிலும் மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீஸ், ராணுவம், தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
5 பேர் உயிரிழப்பு
ஹிமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டம் கிஜ்வாடி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலச்சரிவில், அங்கிருந்த ஒரு வீடு இடிந்தது. இதில், அந்த வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மம்தா, 27, அவரது மகள்கள் அராங், 2, அமிஷா, 6, இஷிதா, 8 மற்றும் அவரது மருமகள் அகன்ஷிகா, 7 ஆகிய ஐந்து பேரும் இடிபாடுகளுக்குள்புதைந்து உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட மம்தா கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement