வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புளோரிடா: பூமி அருகே வந்த விண்கல்லை விண்கலத்தால் நாசா மோத வைத்து சோதனை செய்தது.
விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வரும் நாசா மற்றொரு பக்கம் விண்கற்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.
சோதனை:
இந்த நிறுவனம் சமீபத்தில் விண்கல் மீது விண்கலத்தை மோதவைக்க சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது எப்போதாவது பெரிய விண்கல் பூமியை தாக்க வந்தால் இதுபோன்ற விண்கலனை பயன்படுத்தி, விண்கல் மீது மோத வைத்து அதனை திசைதிருப்ப நாசா நிறுவனத்தின் நடத்திய ஒரு சோதனை முயற்சி இது.
டார்ட் விண்கலம்:
இதற்காக டார்ட் எனப்படும் விண்கலனை சுமார் 7 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள டிமோர்போஸ் எனப்படும் விண்கல் மீது சுமார் 22,500 KM H வேகத்தில் மோதவிட்டு சோதனை செய்தனர்.
இதனால் அந்த விண்கல்லில் பெரிய பள்ளம் உண்டாகும் எனவும், பெரிய பாறைகளை சிதறடிக்கும் என்றும், விண்வெளியில் புகைமண்டலத்தை உண்டாக்கும் என்றும் ஏற்கனவே கணித்திருந்தனர். இந்த விண்கல் தாக்குதலை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக நாசா அறிவித்திருந்தது . இதனால் இதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
சிறுகோள் மீது மோதியது:
இவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த விண்கலம் அந்த கல்லின் மீது மோதியது. இந்த நிகழ்வு ஏற்பட்ட சமயம் விண்வெளி மற்றும் பூமியில் உள்ள டெலஸ்கோப் அனைத்தும் விண்கல்லை நோக்கியே இருந்தன. ஓரளவு தான் இந்த சோதனை வெற்றி என்கிறார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement