பெண்களுக்கு பாய் ஃபிரண்டுகள் சப்ளை; சர்ச்சையில் சிக்கியது..மொபைல் செயலி!

நாட்டில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதன் பலனாக, வீட்டில் இருந்தபடியே மின்சார வேகத்தில் எந்த வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

நமக்கு தேவையான உணவு, உடை என குண்டூசி முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் வீட்டு வாசலுக்கே வர வைக்க கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாம் எப்போதாவது தனிமையாக உணர்ந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தால் முதலில் தேடுவது நெருங்கிய நண்பர்களை தான்.

அப்படிப்பட்ட தருணங்களில் நண்பர்களுடன் வெளியே சென்று ஊர் சுற்றி விட்டு வந்தால் நாம் சற்று ஆறுதலாக உணர்வோம். ஆனால் யார் என்றே தெரியாத ஒரு நண்பரை வாடகைக்கு எடுத்து ஊர் சுற்ற முடியுமா?

ஆம். முடியும். நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது தொழில்நுட்ப யுகத்தில் என்பதை மறந்து விடவே கூடாது என்பதை நினைவூட்டும் வகையில் பாய் ஃபிரண்டுகளை பெண்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்ற அபாயகரமான சூழல் ஒன்று உருவாகி இருக்கிறது.

உண்மைதான். பெங்களூருவில் பாய் ஃபிரண்டுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் டாய்பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டு உள்ளது. இந்த போர்ட்டலில் காதலனால் ஏமாற்றப்பட்டு, தனிமையில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால், புக் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு டாய்பாய் போர்ட்டலுக்கான ஏபிகே ஃபைலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பயன்பாடு Google Play store இல் பெரும்பாலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனாலும், இந்த விவகாரம் தற்போது பெங்களூருவில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் சமூக வலைதளங்களில் ஆதரவு குரல்களும், எதிர்க் குரல்களும் போட்டிப் போட்டபடி உலா வருவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என, பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.