அமரர் கல்கியின் கற்பனையில் வளர்த்தெடுக்கப்பட்ட சிறந்த கற்பனைக் கதாபாத்திரம் நந்தினி. பேரழகி, கூர் மதி, அழவார்க்கடியான் நம்பியின் வளர்ப்புத் தங்கை, ஆதித்த கரிகாலனின் காதலி, பெரிய பழுவேட்டரையரின் ஆசை மனைவி. பொன்னியின் செல்வன் நாவலை உலுக்கும் இந்த நந்தினி யார்?
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடக்கும் தீராத அதிகாரப் போர் பகை. வயது முதிர்வால் நோய்வாய்ப்பட்டுள்ள சோழப் பேரரசர் சுந்தர சோழருக்கு அடுத்து சோழ அரியணையைக் கைப்பற்ற அரசகுல மன்னர்களிடையே நடக்கும் சூழ்ச்சிகள். இந்த அதிகார போர்க்களத்தின் நடுவே பெண் ஒருத்தி தனது ராஜதந்திரத்தின் மூலம் சோழ ராஜ்யத்தை அழித்து, பழிதீர்த்து அரியணையைக் கைப்பற்ற நினைக்கிறாள். அவள் தான் கல்கியின் கற்பனைக் கதாபாத்திரமான நந்தினி.
நந்தினி யார்?, எங்கிருந்து வந்தவள்?, எதற்காகச் சோழர்களைப் பழிதீர்க்க நினைக்கிறாள் என்பதை மர்மமாகவே வைத்திருப்பார் கல்கி. நந்தினி பற்றிய மர்மங்களுக்கான பதில்கள் அழ்வர்க்கடியான் நம்பி, வந்தியத் தேவன் மூலம் நாவலின் போக்கில் பயணிக்க பயணிக்க கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவரும். இந்தக் கதாபத்திரம் நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கோணத்திலும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட மர்மம் நிறைந்த கதாபத்திரமாகவே இருக்கும்.
அழ்வர்க்கடியான் நம்பி சொல்லும் நந்தினி வயது முதிர்ந்த சோழ தேசத்தின் முக்கிய அமைச்சரான பழுவேட்டரையர் ஆசை மனைவியாக ஆதாய அடைக்கலம் தேடிய பெண். ஆழ்வர்க்கடியான் நம்பியின் தங்கை. ஆனால், வந்தியத் தேவன் சந்திக்கும் நந்தினி பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து பழுவேட்டரையர் தன்வசமாக்கி அதன்மூலம் சோழ ராஜ்யத்தை அழித்துப் பழிதீர்க்கத் துடிக்கும் ராஜதந்திரம் நிறைந்தப் பெண். இப்படி நந்தினி கதாபாத்திரம் ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரமாகவே கதையோட்டத்தில் நகரும்.
உண்மையில் நந்தினி யார் என்று பார்த்தோமேயானால் அதற்கானப் பதில்கள் நாவலின் பயணத்தில் அங்கங்கே சொல்லப்பட்டிருக்கும். இது கல்கியின் கற்பனைக் கதாபாத்திரம் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்கான தொடக்கத்தையும் முடிவையும் கல்கியே வரையறுத்து இருப்பார். அதன்படி, நந்தினி ஒரு ஆதவற்றவராக நதிக்கரையின் அருகில் உள்ள நந்தவனத்தில் ஆழ்வர்க்கடியான் நம்பியின் பெற்றோர்க்குக் கிடைக்கிறாள். அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததால் ‘நந்தினி’ என்று பெயர் சூட்டப்படுகிறாள். பின்னர், ஆழ்வர்க்கடியானின் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு ஆழ்வர்க்கடியான் தனது வளர்ப்புத் தங்கையாக நந்தினியை வளர்க்கிறார். நந்தினி யாரென்று வெளிப்படுவதுதான் நாவலின் சுவாரஸ்யமான பகுதியாக இருக்கும்.
சிறுவயதில் தஞ்சையின் பழையாறையில் வளர்ந்த நந்தினியை சோழ இளவரசரான ஆதித்த கரிகாலன் நந்தினி இருவரும் சிறுவயதில் காதலித்து வந்தனர். அதன்பிறகு நந்தினி ஆனால், பிற்காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கு நடந்த போரில் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை ஆதித்த கரிகாலன் துண்டாக வெட்டி சோழ தேசம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்கிறார். இதன் காரணமாக சோழ ராஜ்யத்தை அழித்துப் பழிதீர்க்கும் எண்ணத்தில் தனது பேரழகையும், மதிக்கூர்மையையும் ஆயுதமாகப் பயன்படுத்தி பலரை தன் வலையில் சிக்க வைத்து மந்திரவாதியான ரவிதாஸன் முதலிய பாண்டிய ஆபத்துதவிகளை வைத்துக்கொண்டு பல ராஜதந்திர செயல்களில் ஈடுபடுகிறார். ஆதித்த கரிகாலனின் கொலையில் முக்கியப் பங்காற்றுவதாகக் காட்சிப்படுத்தப்படும் நந்தினி, இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மரை கொலை செய்வதற்காக பண உதவிகளையும் செய்கிறார்.
நந்தினியின் பேரழகு வலையில் சிக்காதவர்கள் அருள்மொழி வர்மரும், வந்தியத் தேவன் மட்டும் தான். இப்படி சோழர்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டி அதை நேர்த்தியாக நிறைவேற்றிவரும் நந்தினி இறுதியாக இராஜராஜசோழரைச் சந்தித்து தன்னைப் பற்றி கூறிவிடுவதாக முடியும்.
இத்தனை மர்மங்கள் நிறைந்த இந்த நந்தினி கதாபத்திரம் கற்பனையா? அல்லது உண்மையா? என்னும் அளவிற்கு நந்தியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார் கல்கி. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். உங்கள் பார்வையில் இந்த நந்தினி கதாபாத்திரம் எத்தகையது?, நந்தினியின் கதாபாத்திரத்தில் உள்ள வேறுசில மர்மங்கள் என்னென்ன என்பதை கமெண்டில் கூறவும்.
பொன்னியின் செல்வனை ஆடியோ வடிவில் கேட்க
4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த விகடன், இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் மீண்டும் நம் வாசகர்களை வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404