வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மது விற்பனை உரிமம் கொள்கை முறை கேடு தொடர்பான வழக்கில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் விஜய் நாயாரை சி.பி.ஐ., கைது செய்தது.
டில்லியில் 2021 – 22ம் ஆண்டுக்கான மதுபான விற்பனை உரிமம் வழங்கும் கொள்கையில், மாற்றம் செய்யப்பட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் உரிமம், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த ஆக.20-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில், மிக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக சிசோடியா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
முதல் கைது
இந்த வழக்கில் இன்று (செப்.27) சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்த சி.பி.ஐ., துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு நெருக்கமானவரும், மது தயாரிப்பு ஆலை ஒன்றின் முன்னாள் சி.இ.ஓ.வான விஜய் நாயர் என்பவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement