மாமன்னன் படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படம்!

கடந்த 2018ம் ஆண்டு கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டனர் இயக்குனர் மாரி செல்வராஜ்.  இந்த படத்திற்கு ஏரளமான நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை பெற்றது, இந்த படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது.  முதல் படத்திற்கு கிடைத்த வெற்றியினை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கினார், முதல் படத்திற்கு எந்த அளவிற்கு வெற்றி கிடைத்ததோ அதனை போலவே இவரது இரண்டாவது படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  தனது முதல் இரண்டு பாடங்களையுமே வெற்றி படமாக கொடுத்த இவரின் அடுத்ததடுத்த படங்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர்.  இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.  ‘கர்ணன்’ படம் போன்று ‘மாமன்னன்’ படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதாக சில தகவல்கள் வெளியானது.  சமீபத்தில் இப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர், தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்தகட்ட திட்டம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்ப்படி, அடுத்ததாக மாரி செல்வராஜ் வெப் தொடர் ஒன்றை இயக்கவிருப்பதாகவும், அந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.  மேலும் இந்த வெப் தொடருக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இதில் கலையரசன் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்த வெப் தொடரில் நடிக்கப்போகும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.