முன்னாள் மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை நண்பனுக்கு பகிர்ந்த நபர்! – அபராதம் விதித்த நீதிமன்றம்

சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்திருக்கிறார்கள். இந்த நிலையில், விவாகரத்து பெற்ற பெண்மணி காவல்துறையில் தன் முன்னாள் கணவர்மீது புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகார் மனுவில் அவர், “எனக்கும் அவருக்கும் விவாகரத்தாகி இரண்டாண்டுகளாகிவிட்டன. இந்த நிலையில், தற்போது அவர் என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை தன் நண்பருக்குப் பகிர்ந்திருப்பதை அறிந்தேன். எனவே அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கணவன் – மனைவி ( மாதிரிப் படம்)

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையில், அந்தப் பெண் தரப்பு வக்கீல், “அந்தப் புகைப்படங்கள் விவாகரத்து பெற்றதற்கு பிறகு பெண்ணை அவமாரியாதை செய்வதற்காக பகிரப்பட்டிருக்கின்றன. எனவே அதைப் பகிர்ந்தவருக்கும், பெற்றவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என வாதாடினார்.

அதேபோல அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் தரப்பு வக்கீல், “அந்தப் புகைப்படங்கள் விவாகரத்து பெறுவதற்கு முன்பே அனுப்பப்பட்டன. அதாவது, கணவன் மனைவி இருவருக்குமிடையே புரிதலோடு இருக்கும்போதே அந்தப் புகைப்படங்கள் அனுப்பபட்டன. இந்த நிலையில், தற்போது பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது” என வாதிட்டார்.

தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “மே 2019-ல், தம்பதியினர் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த நபர் தன் முன்னாள் மனைவியின் அனுமதியின்றி தனது நண்பருக்கு அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார். அதனால், அவருக்கு 3,500 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.