ஹைதராபாத் :தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் மேரி மற்றும் துர்கா சிலைகளை சேதப்படுத்திய, பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் ஹைதராபாதில் உள்ள கைரதாபாத் என்ற இடத்தில், தேவாலய வாசலில் இருந்த கன்னி மேரி மற்றும் அதற்கு சற்று துாரத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்கள் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இரு பெண்களையும் கண்டுபிடித்து கைது செய்தனர். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என தெரிவித்த போலீசார், சகோதரிகளான இருவரும் மனநிலை சரியில்லாதவர்கள் என்றனர். சேதப்படுத்தப்பட்ட சிலைகள் உடனடியாக சீரமைக்கப்பட்டன.
ஹைதராபாத் :தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் மேரி மற்றும் துர்கா சிலைகளை சேதப்படுத்திய, பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்