மேலும் தள்ளிப்போகும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை – என்ன காரணம்?

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை மீண்டும் இம்மாத  இறுதிக்குள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை மீண்டும் இந்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விமான உற்பத்தியாளர்கள் விமானங்களுக்கான ஆர்டரை எடுப்பதில் தாமதம் செய்து வருவதால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தொடங்குவது மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்டர் தொடர்பான ஒப்பந்தங்களை விரைவுபடுத்த விமான உற்பத்தியாளர்களுடன் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 50 ‘ஏர்பஸ் எஸ்இ ஏ220’ விமானங்களை ஆர்டர் எடுப்பதற்கு கேரியர் போயிங் கோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் ஜெட் ஏர்வேஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

image
கடந்த 2019ஆம் ஆண்டு 25,000 கோடி ரூபாய் கடன் பிரச்னையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ், தற்காலிகமாக விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த கடன் தொகையை மீட்க ஏலத்திற்கு வந்தது. 2020-ம் ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் கொரோனா தொற்று காலம் என்பதால் அதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு எல்லா அனுமதிகளையும் ஜெட் ஏர்வேஸ் பெற்றுள்ளது. விமானங்களை இயக்கும் விமானிகளை பணியமர்த்தலுக்கான பணிகளையும் ஜெட் ஏர்வேஸ் துரிதப்படுத்தியுள்ளது.  

இதையும் படிக்க: ”ஆதார் இருந்தால்தான் சோறு” -விருந்தினர்களிடம் கறார் காட்டிய மணமகள் வீட்டார்; ஏன் தெரியுமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.