யமுனை நதியில் நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டியது! டெல்லியின் நிலவரம் என்ன?

டெல்லியில் யமுனை நதியில் நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டி அதிகரித்துள்ள நிலையில் கரையோர மக்களை வெளியேற்றும் பணிகளில் டெல்லி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
யமுனை நதி உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. வட மாநிலங்கள் பலவற்றில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாகத் தலைநகர் டெல்லிக்குள் ஓடும் யமுனை நதியிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
அபாய கட்டம் 205.33 மீட்டர் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 206.11 மீட்டருக்கும் மேல் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பதிவானதிலேயே அதிகபட்ச அளவு இது தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
image
இதனால் கரையோரம் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் வேலைகளில் டெல்லி அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படும் மக்கள் பத்திரமாக தங்க வைக்கப்படுவதற்காகச் சிறப்பு மழைக்கால முகாம்களும் டெல்லி அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இப்படி எச்சரிக்கை கொடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சுமார் 7000 பேர் கரையோர பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.