ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் ராணுவ வீரர் – கண்கலங்க வைக்கும் புகைப்படம்!

ரஷ்யாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்பு உள்ள அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அண்டை நாடான ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை தாக்கிய ரஷ்யப் படைகள், அந்நாட்டு ராணுவ வீரர்களையும் கைது செய்தனர். ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்களும் முடிந்தவரை பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர். போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் போரை நிறுத்த உடன்படவில்லை.

கடலுக்கடியில் வெடித்த எரிமலை – பசிபிக் பெருங்கடலில் உருவான தீவு!

இந்நிலையில், ரஷ்யாவிடம் சிறைக் கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்னர் உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் எப்படி காணப்படுகிறார் என்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கைதிகளான 205 பேரில் இவரும் ஒருவர். அதில், உக்ரைன் வீரரின் புகைப்படங்கள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன.

இதுபற்றி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களில் ஒருவர். ரஷ்யாவின் கைதியாக பிடிபட்டவர்களில் மற்றவர்களின் நிலைக்கு மாற்றாக, இவர் உயிர் பிழைத்து உள்ளார். இதுவே, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ரஷ்யா எப்படி நடந்து கொள்கிறது என்பது தெளிவாக காட்டப்பட்டு உள்ளது. வெட்கக்கேடான நாசிச மரபுகளை ரஷ்யா எப்படி தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதற்கும் இது எடுத்துக்காட்டு” என தெரிவித்து உள்ளது.

கைதியாவதற்கு முன் போர் வீரராக துப்பாக்கியை ஏந்தி காட்சி தரும் டையனோவ், சிறை பிடித்த பின்னர், தேகம் மெலிந்து, கண்கள் அமைந்த பகுதியில் வீங்கி, விகார தோற்றத்துடன் காணப்பட்டார். அவரது கைகள் மற்றும் முகம் ஆகியவற்றில் தழும்புகள், காயங்கள் ஆகியவை காணப்படுகின்றன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கீவ் ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் வைக்கப்பட்டு உள்ளார் என அவரது சகோதரி அலோனா லாவ்ருஷ்கோ கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.