உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, யூ – டியூப் பயன்படுத்தி பார்ப்பதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலையில் காண்பதற்கான தளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.
இன்று முதல், அனைத்து அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணை நிகழ்வுகளும் நேரலையாக வெளியிடப்பட்டன. எனினும், யூ – டியூப்பில் உச்ச நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையாக வெளியிட்டும், பின்னர் அவற்றை நீதிமன்றம் தனது சர்வரில் வைத்து, அதன் வழியே வெளியிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தொடர்புடைய வழக்கு விசாரணை காட்சிகளை, உச்ச நீதிமன்றம் நேரலை செய்தது. இது தவிர மேலும் இரண்டு வழக்குகளின் நேரடி காட்சிகளை கொண்ட நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டன.