வாடகைத்தாய் சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் – மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,

இனப்பெருக்க தொழில்நுட்ப திருத்த சட்டம், வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக சென்னையை சேர்ந்த அருண் முத்துவேல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ”இரு சட்டங்களும் ஒருதலைபட்சமாக இருப்பதுடன், வேறுபாடுகளையும் உருவாக்குகின்றன. மேலும், அந்தரங்க உரிமைகளுக்கும், பெண்ணின் இனப்பெருக்க உரிமைகளுக்கும் எதிராக உள்ளன. எனவே, சமத்துவ உரிமை, தனிமனித சுதந்திரத்துக்கும் எதிராக உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.