ஷின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

கடந்த ஜூலை 8ஆம் தேதி நாரா என்ற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷின்சோ அபே, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார்.

இன்று அதிகாலை சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பூமியோ கிஷிடாவை சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவு குறித்தும், பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

மேலும், இந்திய-ஜப்பான் கூட்டுறவை மேலும் பலப்படுத்தி, சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் பலம் பெற துணை நிற்பதாக உறுதியளித்தன. தொடர்ந்து அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா நன்றி தெரித்தார்.

பிரதமர் மோடி, பிரதமர் அபேவுடன் இணைந்து இந்தியா – ஜப்பான் உறவுகளை பலப்படுத்தியதாக கிஷிடா புகழாரம் தெரிவித்தார். அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இறுதி சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோனி அல்பனேஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல உலக தலைவர்கள், வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.