கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில், மாணவியின் பெற்றோர்கள் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக, அவரின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு, கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விரைந்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி போலீசார் தரப்பில் ஒரு அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குறிப்பிட்ட நீதிபதி அவர்கள், மனுதாரரின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டிருப்பதால், இந்த வழக்கை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், ஏற்கனவே நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வருகிறது. இந்த வழக்கின் இரு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரத பரிசோதனை அறிக்கைகள், உள்ளிட்டவர்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணை முடியும் வரை வழக்கின் ஆவணங்களை மனுதாருக்கு ஒப்படைக்க கூடாது என்று, சிபிசிஐடி போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், பள்ளி விடுதியில் மாணவி பயன்படுத்திய செல்போனை, மாணவியின் பெற்றோர்கள் தரமறுப்பதாகவும், மரபணு பரிசோதனைக்கு பெற்றோர்கள் மாதிரிகளை வழங்குவதற்கு மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி அவர்கள், மாணவி செல்போன் பயன்படுத்தியிருந்தால், அதனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் மாணவியின் பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை அறிக்கையை அக்டோபர் பத்தாம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.