பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் Zerodha. அந்நிறுவனத்தின் CEO நிதின் காமத் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உடற்பயிற்சியின் மூலம் உடல்நலனை முறையாக பார்த்துக்கொள்ளும் ஊழியர்களுக்குப் ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். பெரும்பாலானோர் கொரோனா தொற்றின் போது வீட்டில் இருந்தபடி வேலை செய்ய தொடங்கியதால் ஊழியர்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் மேல் உள்ள கவனம் குறைத்துள்ளதாக நிதின் காமத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உடல் நலன் தொடர்பாக செரோதா நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு சில சவால்களைக் கொடுத்துள்ளது. அந்த சவால்களைச் சரியாக கடைப்பிடிக்கும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாகவும்,
அதில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என Zerodha நிறுவனத்தின் CEO நிதின் காமத் அறிவித்துள்ளார். இது குறித்து நிதின் காமத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், ஒரு நாளைக்கு 350 கலோரிகளை குறைப்பது தான் சவால் என்றும், இதற்கான இலக்குகள் தினமும் அமைக்கப்படும் என்றும், இந்த இலக்கில் 90 சதவிகிதத்தை நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் அடையும் ஊழியர்களுக்கு தங்களது ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சவாலில் வெற்றி பெறும் ஊழியர்களுக்கு குலுக்கல் முறையில் போட்டி நடைபெறும் என்றும் அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் நிதின் காமத் தெரிவித்துள்ளார்.