அதிமுகவின் தென் மண்டல தளபதி யார்? எடப்பாடியை வரவேற்க தயாராகும் ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை

நீக்கிய பின்னர் தென் மண்டலத்தில் தனது செல்வாக்கு சரிந்துவிடக்கூடாது என்பதற்காக தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாருக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆர்.பி.உதயகுமாரே பதிலளித்து வந்தார். இதனால் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புகழ்பாடும் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகாசி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தொண்டர்களை தயார் படுத்தும் வகையில் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ள்ளார்.

“கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பாண்டிய மண்டலத்தில் நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்கிறார்,

அதனை தொடர்ந்து நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து திருமங்கலம் வழியாக சிவகாசியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதனையொட்டி திருமங்கலம் மேலக்கோட்டை அருகே உள்ள கரிசல்பட்டியில் இருந்து சிவரக்கோட்டை, கள்ளிக்குடி வரை மதுரை மாவட்டத்தில் பல்வேறு சாதனை திட்டங்களை வாரி வழங்கிய எடப்பாடியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கழக அம்மா பேரவை சார்பில் மாபெரும் எழுச்சி மிக்க நன்றி அறிவிப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதில் கழகத் தொண்டர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள், ஆகியோர் பங்கேற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் அமையும் வண்ணம் இந்த வரவேற்பு அமைய உள்ளது .

அதனைத் தொடர்ந்து சிவகாசியில் இருந்து புறப்பட்டு மாலையில் மதுரை மாநகர், மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்கிறார். அங்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும், கழக அம்மா பேரவை சார்பிலும் கழகத் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.