பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது. இதை அடுத்து, சில நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தகவல் வெளியாகினது. அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், கல்வித்துறையில் பல நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷூக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவந்தன.
தற்போது அமைச்சர் அன்பில் மகேஷூக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியாகியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு இன்னும் இரண்டு நாட்களில் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரீ ஃபயர் விளையாட்டு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது – நீதிபதிகள் கருத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM