2022 ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
அபுதாபி T10 லீக் தொடரானது இந்த ஆண்டு ஆறாவது முறையாக நவம்பர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அணிகளுக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் நேற்று (26) நடைபெற்றது.
இவ் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான சாமிக கருணாரட்னவும், துஷ்மன்த சமீரவும் இரு வெவ்வேறு அணிகள் மூலம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஏலத்திற்கு முன்னர் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தாங்கள் விரும்பிய வீரர்களை தங்களுக்காக தக்க வைத்துக் கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில் வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, மகீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தங்களது முன்னைய அணிகள் மூலம் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்த ஆண்டுக்கான T10 லீக் தொடரில் இலங்கை அணி வீரர்கள் 7 பேர் களமிறங்குகின்றனர்.