பாரபங்கி : உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு, குடிபோதையிலிருந்த டாக்டர் சிகிச்சை அளித்த நிலையில் அக்குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து அவர் பணியில் இருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்திலிருக்கும் சிரவ்லி கவுஸ்பூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் ‘பாப்கார்ன்’ சிக்கியதால், நேற்று முன் தினம் இரவு பெற்றோர் குழந்தையை துாக்கி வந்தனர்.அப்போது, மருத்துவமனையில் இருந்த டாக்டர் தர்மேந்திர குப்தா குடிபோதையில் இருந்துள்ளார். அதோடு அவர் குழந்தைக்கு சிகிச்சை அளித்த நிலையில் குழந்தை உயிரிழந்தது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமான ‘வீடியோ’ வேகமாக பரவியது.இதையடுத்து டாக்டர் தர்மேந்திரா குப்தா பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மூன்று டாக்டர்கள் அடங்கிய குழு, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. ‘குற்றம் நிரூபிக்கப்பட்டால், டாக்டர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என சீனியர் டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement