குளிக்கும் வீடியோவை டாக்டருக்கு அனுப்பிய மாணவி..!! அதுவும் சக விடுதி பெண்களை..!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (31). இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து வருகிறார்.

ஆசிக்கும், காளீஸ்வரியும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், காளீஸ்வரி தன்னுடன் தங்கியுள்ள விடுதி பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஆசிக்கிற்கு அனுப்பி வந்துள்ளார். மேலும் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

இப்படி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அனுப்புவதை பார்த்த பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் காளீஸ்வரியின் செல்போனை பார்த்தபோது இந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது. இதையடுத்து, விடுதியின் மேலாளர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் செல்போனில் பெண்கள் குளியல் காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகள் பகிரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிக் மற்றும் காளீஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் சண்டிக்கரில் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பிய சக மாணவியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.