கேரளாவில் பி.எப்.ஐ., கலைப்பு: மாநில செயலர் அறிவிப்பு| Dinamalar

திருவனந்தபுரம்: கேரளாவில் பி.எப்.ஐ., அமைப்பு கலைக்கப்படுவதாக அதன் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த அமைப்பு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் கேரளாவில் அந்த அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது . இது தொடர்பாக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கூறியது, நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.