டமாஸ்கஸ்: மேற்காசிய நாடான லெபனானில் உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் அங்குள்ள ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். மத்திய தரைக்கடலில் சட்டவிரோதமாக படகுகளில் செல்லும் பலர், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
கடந்த வாரம் 150 பேருடன் லெபனானில் இருந்து சென்ற படகு, அதன் அண்டை நாடான சிரியாவின் கடற்கரை நகரான டார்டவுஸ் அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. உடனடியாக 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில், இதுவரை 10 குழந்தைகள் உட்பட 100 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.
டமாஸ்கஸ்: மேற்காசிய நாடான லெபனானில் உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் அங்குள்ள ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்