சுருக்குமடி வலை விவகாரம் – ஆய்வு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக பிரமுகர்.!

ஆய்வுக்குச் சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனரை திமுக பிரமுகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ள சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் உவரி மீனவ கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலை மூலம் மீன் பிடித்ததாகத் தெரிகிறது. சுருக்குமடி வலை பயன்படுத்த கடந்த 2000 ஆண்டு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மீனவ மக்கள் ஒரு சிலர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
image
இந்நிலையில் இதுகுறித்து சுருக்குமடி வலையை பயன்படுத்திய மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தச்சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணி ராய் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அதிகாரிகளை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இச்சம்பவம் காவல்துறையினர் முன்பே நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் இதனை செல்போனில் படம் பிடித்த நிலையில், தற்போது அது வைரலாகி இருக்கிறது. அந்தோணி ராய் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டுவதும் அடிக்க கையை ஓங்குவதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது.
image
இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமாரிடம் கேட்டபோது, ’’சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது. இதனால் இந்த பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர் மிரட்டுவது தொடர்பாக உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.