டெல்லி: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபராதம் செலுத்தக் கோரிய நோட்டீஸை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், ஏ.ஆர்.ரகுமான் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை எனவும் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.