‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்டது. அந்த அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு வந்தநிலையில், இன்று அதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக அரசு கல்லூரிகளில் 1,162 இடங்களும் – நிர்வாக நிலை கல்லூரிகளில் 763 இடங்களும்; முதுநிலை பல் மருத்துவத்திற்கான சுயநிதி கல்லூரிகளில் 31 இடங்களும்; முதுநிலை பல் மருத்துவத்துக்கு பிற கல்லூரிகளில் 296 இடங்களும்; தேசிய வாரிய பட்டப்படிப்பு 94 இடங்களும் என மொத்தம் 2,346 இடங்கள் உள்ளன. இந்த இடங்களானது 23 அரசு கல்லூரிகளிலும் 16 சுயநிதி கல்லூரிகளிலும் இருக்கின்றன.
முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 6,968 பேர் விண்ணப்பித்ததில் 6,893 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்களாகவும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக விண்ணப்பங்கள் 2,925-ம் விண்ணப்பிக்கப்பட்டது. அதில் 286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக உள்ளன.
பல் மருத்துவப் படிப்பிற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்கள் ஆகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாகவும் உள்ளன. இவை அனைத்திற்கும் ஆன கலந்தாய்வு ஆனது இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தய்வு நடைபெறும்.
தமிழகத்தில் தினசரி 100 பேர் அளவிற்கு ஹச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நேற்று 56 ஆக குறைந்துள்ளது. 6,471 இடங்களில் காய்ச்சல் முகாம்கள், 15,900 பள்ளிகளில் வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 15 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். டெங்குவை பொறுத்தவரை நேற்று வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,068 பேர். தற்பொழுது 344 பேர் டெங்கு பாதிப்பினால் சிகிச்சை பெறுகின்றனர். 1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இப்படியொரு அபாயமா!! சுகர் ஃப்ரீ பயன்படுத்துபவர்களுக்கு மருத்துவர் கொடுக்கும் எச்சரிக்கை!!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM