நடிகர் விஷால் வீட்டில் கல்வீச்சு

சண்டைக்கோழி, லத்தி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஷால், 45. இவர், சென்னை, அண்ணா நகர், 12வது தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில், வீட்டின் கண்ணாடி சேதமடைந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சிவப்பு நிற காரில் வந்த மர்மநபர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, விஷால் சார்பில் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். விஷால் படப்பிடிப்பற்காக வெளியூர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.