நாணயம் விகடன் வெபினார்: ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் பற்றி இலவசமாக தெரிந்து கொள்ள வேண்டுமா?

நாணயம் விகடன் மற்றும் கிளாசிக் போலோ (Classic Polo) இணைந்து நடத்தும் `ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் & வளர்ச்சி!’ என்ற  கட்டணமில்லா ஆன்லைன் பயிலரங்கு, அக்டோபர் 1, 2022 (சனிக்கிழமை) பகல் 11.00 முதல் 12.00 மணி வரை நடக்கிறது.

இதில் ஃப்ரான்சைஸ் நிபுணர் ஐயப்பன் ராஜேந்திரன், கிளாசிக் போலோ நிறுவனத்தின் தென் பிராந்திய மேலாளர் தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

சித்தரிப்பு படம்

ரெடிமேட் ஆடைகள் விற்பனையில் ஃப்ரான்சைஸ் பங்களிப்பு எப்படி? எவ்வளவு செலவாகும்? என்ன லாபம் கிடைக்கும் என்பது பற்றி ஃப்ரான்சைஸ் நிபுணர் ஐயப்பன் ராஜேந்திரன் விளக்கிப் பேசுகிறார்.

கிளாசிக் போலோ தென் பிராந்திய மேலாளர் தனசேகரன், கிளாசிக் போலோ வளர்ந்த வரலாறு மற்றும் அந்த நிறுவனம் அளிக்கும் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்.

இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது மூலம் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். முன் பதிவு அவசியம்.

முன்பதிவு செய்ய…

https://events.vikatan.com/411-classic-polo-franchise/

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.