சென்னை: நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடுஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்து சமர்பிக்க வேண்டும என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும், தபால், நேரடியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போர் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர் பணி யிடத்துக்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள், அரசு பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.