பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

2021-ல் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து, இந்த திட்டத்தின் 7-வது கட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

‘இது வரவிருக்கும் நவராத்திரி, தசரா, மிலாது நபி, தீபாவளி, சத் பூஜா, குருநானக் தேவ் ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு உதவியாக இருக்கும். நிதிச்சுமை ஏதும் இல்லாமல் சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு உணவு தானியங்கள் எளிதாக கிடைப்பதால் அவர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இந்த நலத்திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் அனைவருக்கும் விலையில்லாமல் ஒவ்வொரு நபருக்கும் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. தற்போது மேலும் 3 மாதங்களுக்கு இந்த திட்டம் நீடிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு ரூ.44,762 கோடி கூடுதலாக செலவாகும். 7-ம் கட்டத்திற்கு உணவு தானிய ஒதுக்கீடு 122 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கக்கூடும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.