மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உடன், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் எனப்படும், தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இன்று, மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்து உள்ளார். இவர், பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.