முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி : இந்தியா- தென்னாப்பிரிக்கா  இன்று பலப்பரீட்சை  

இந்தியா-  தென்னாப்பிரிக்கா  அணிகள் மோதும் முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
 
முதல் ரி20 போட்டி இன்று (28) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 ரி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென் ஆப்பிரிக்கா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
 
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
 
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல் அல்லது அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் அல்லது தீபக் சாஹர்.
 
தென்னாப்பிரிக்கா : பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக், மார்க்ராம், ரிலீ ரோசவ் அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பிரிட்டோரியஸ் அல்லது பெலுக்வாயோ, ஷம்சி, ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.