வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முப்படை தலைமை தளபதியாக அனில் சுவுகான் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராணுவம், விமான மற்றும் கடற்படை என, ஒவ்வொரு படைக்கும் தனித் தனியாக தளபதிகள் உள்ள நிலையில், முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி என்ற பெயரில் பதவி உருவாக்கப்பட்டது. இதன்படி நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார்.
இவர் கடந்தாண்டு டிசம்பரில் நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் துரதிஷ்டவசமாக பலியானார்.’இதையடுத்து இப்பதவி காலியாக உள்ள நிலையில் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலரான அனில் சவுகான் முப்படை தலைமை தளபதியாக இன்று அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக இன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர் தற்போது வகித்து வரும் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலர் பதவியும் வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement