புதுடில்லி : சிறுவர் – சிறுமியரிடம் இருந்து ‘மொபைல் கேம்’ என்ற பெயரில், பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்த சிங்கப்பூர் நிறு வனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோத னையை தொடர்ந்து, ரூ.68 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.
இது குறித்து அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாவது:
புதுடில்லியில், சிங்கப்பூரைச் சேர்ந்த, ‘கோடா பேமென்ட்ஸ் இந்தியா லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இது சிறார்களுக்கான விளையாட்டுகளை தயாரித்து மொபைல்போனில் இயக்கி வருகிறது. இதன்வாயிலாக, இந்நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக ஏராளமான புகார்கள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில், இந்நிறுவனத்துக்கு சொந்தமான மூன்று இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதில், இந்நிறுவனம் இதுவரை 2,850 கோடி ரூபாய் வசூலித்து, 2,265 கோடி ரூபாயை சிங்கப்பூரில் உள்ள தலைமை நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. அதோடு, இந்நிறுவனம், மொபைல்போனில் விளையாடும் சிறுவர், சிறுமியரிடம் இருந்து ஏமாற்றி பணமோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது வங்கி கணக்குகள், மற்றும் வைப்புத் தொகையாக வங்கிகளில் உள்ள 68.53கோடி ரூபாய் ஆகியவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement