ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் செய்தி: விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டிற்கான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் திறமைக்கு ஏற்ற வகையில் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக ஜீ பிசினஸ் நியூஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால், இந்திய ரயில்வேக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இது தவிர, மேலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நான்கு சதவீத உயர்வுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியது.
முன்னதாக, மத்திய அமைச்சரவை 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸுக்கு ( Production-Linked Bonus – PLB) ஒப்புதல் அளித்துள்ளது. இது 1.156 மில்லியன் நான்-கேஸடட் ரயில்வே ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
முந்தைய ஆண்டு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க கிட்டத்தட்ட ரூ.1,985 கோடி செலவானது. விஜயதசமி மற்றும் தீபாளி பண்டிகைகளுக்கு முன்னதாக போனஸ் அறிவிக்கப்படுவது வழக்கம். தகுதியுள்ள நான்-கேஸடட் ரயில்வே ஊழியர்களுக்கு PLB செலுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஊதியக் கணக்கீட்டு உச்சவரம்பு மாதம் ரூ.7,000/- ஆகும். தகுதியான ரயில்வே ஊழியருக்கு 78 நாட்களுக்கான போனஸாக அதிகபட்சம் ரூ.17,951 வழங்கப்படும்.
இரயில்வேயில் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் நாடு முழுவதும் பரவியுள்ள RPF/RPSF பணியாளர்களைத் தவிர்த்து அனைத்து ரயில்வே நான்-கேஸடட் ஊழியர்களையும் உள்ளடக்கியது. 1979-80 ஆம் ஆண்டில் PLB என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசின் முதல் துறை சார்ந்த நிறுவனமாக ரயில்வே உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் செயல்திறனில், முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமாக ரயில்வேயின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் செயல்திறனில், முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமாக ரயில்வேயின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்திய ரயில்வே ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFIR) பொதுச் செயலாளர் ராகவய்யா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு எழுதிய கடிதத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், முந்தைய ஆண்டுகளை விட அதிக நாட்கள் போனஸ் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.