கீவ் : ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை அந்த நாட்டுடன் இணைப்பதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு முடிந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது.இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.இதற்காக இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் ஓட்டெடுப்பு கடந்த வாரம் துவங்கி, நேற்றுடன் முடிந்தது.
ஏற்கனவே போரின்போது பலர் வெளியேறியுள்ள நிலையில், அங்கு தங்கியுள்ள மக்களிடம், ரஷ்ய ராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று ஓட்டுக்களை பெற்றுள்ளனர்.இந்த ஓட்டெடுப்பின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ளன. இந்தப் பிராந்தியங்கள் இணைந்தால், அங்கு தன் படைகளை ரஷ்யா நிலைநிறுத்தி வைக்க முடியும்.
ஏற்கனவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். தற்போது ஓட்டெடுப்பு முடிந்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான வார்த்தை போர் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement