ரஷ்யாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் எரிவாயு பைப்லைன் பாதையில் மர்மமான வெடிப்பு சிறிய அளவிலான நிலநடுக்கத்தைத் தூண்டியது.
பால்டிக் கடலில் ரஷ்யாவுக்கு சொந்தமான Nord Stream எரிவாயு குழாய்களில் இருந்து கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன.
தாக்குதல்கள் நடந்த கடல் பகுதிகளில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
டென்மார்க்கிற்கு அருகிலுள்ள நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2-ல் இருந்து மூன்று மர்ம கசிவுகள் பகுதிகளில் நீருக்கடியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் பதிவு செய்யப்பட்டன.
ரஷ்யாவில் இருந்து பால்டிக் கடல் மார்க்கமாக முதலில் ஜேர்மனிக்கு வந்து, மொத்த ஐரோப்பாவையும் இணைக்கும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 எரிவாயு குழாயில் மர்மமான முறையில் தாக்குதல் முன்னெடுத்திருப்பதாக முதலில் ஜேர்மனி குற்றஞ்சாட்டியது.
அதனைத் தொடர்ந்து, இது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல் என ஐரோப்பிய நாடுகள் குற்றசாட்டுகின்றன.
தாக்குதல்கள் நடந்த கடல் பகுதிகளில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஸ்வீடனின் தேசிய நில அதிர்வு மையம் (SNSN) மூன்று வெடிப்புகளில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 2.3 என அளவிடப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியது.
“அலைகள் கீழே இருந்து மேற்பரப்புக்கு எப்படித் குதிக்கின்றன என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம்” என்று SNSN நில அதிர்வு நிபுணர் பிஜோர்ன் லண்ட் கூறினார்.
‘இது குண்டுவெடிப்பு அல்லது வெடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை” என்று SNSN கூறியுள்ளது.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், ‘வேண்டுமென்றே செய்த செயல்களால்’ கசிவுகள் ஏற்பட்டதாக தனது அரசாங்கம் நம்புவதாகக் கூறினார்.
உக்ரைனும் இந்த சம்பவத்தை ‘பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை’ என்று ரஷ்யாவை நோக்கி விரலை நீட்டியுள்ளது.
லாட்வியன் பாதுகாப்பு அமைச்சர் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு குழாய் வெடிப்புகளை கூட்டாக விசாரிக்க அழைப்பு விடுத்துள்ளார்.