22.3 மில்லியன் ரூபாவை கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது!

வங்கியில் பணத்தை வைப்பிலிட வந்த நபரிடம் இருந்து 22.3 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இரு கொள்ளையர்களை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொள்ளையர்கள் 48 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும் , சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் அந்த பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் சந்தேக நபர்களை மடக்கி பிடித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.