அடிக்கடி இடத்தை மாற்றும் நடிகை மீரா மிதுன்!!

நடிகை மீரா மிதுன் இடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால் கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜரகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுனின் செல் போன் எண் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதாக காவல்துறை தரப்பு வழக்கறிஞர் எம். சுதாகர் தெரிவித்தார். மீரா மிதுன், இடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால், கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை எனவும் நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். வழக்கு விசாரணையை அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.