வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதில் அமெரிக்காவில் தாமதம் ஏற்படுவதாகவும் , இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசிடம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்கா சென்ற அவர் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
என்னுடைய அமெரிக்க பயணம் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியா -அமெரிக்க உறவு உலகம் தழுவிய மாற்றத்தை ஏற்படுத்தும். இரு நாட்டு உறவு மிக முக்கியமானதாகும். அமெரிக்க விசா நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும், பல இந்திய மாணவர்கள் அமெரிக்க விசா கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க வேண்டும். இந்தோ பசிபிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement