ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை ஏன்? அண்ணாமலை கேள்வி!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாவட்ட வாரிய காவல்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்க காரணம் என்ன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் நடைபெறும் பாரம்பரிய ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்க காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழகத்தில் மாற்று கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினரும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல உரிமை மறுக்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.