இந்தியாவுக்கு புதிய ஆபத்து?; வெளியானது அதிர்ச்சி தகவல்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. கண் பார்வையற்றவர். கடந்த 1911ம் ஆண்டு வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகா பகுதியில் பிறந்த இந்த பெண் தனது 85 வயதில் 1996ம் ஆண்டு காலமானார்.

பாபா வாங்கா பல்கேரியா நாட்டின் நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர், தன்னுடைய வாழ்நாளில் எதிர் காலத்தில் நடக்க இருக்கும் பல்வேறு சம்பவங்களை முன்கூட்டியே கணித்து கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பாபா வாங்கா கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் அப்படியே சொல்லி வைத்தது போல் நடந்து உள்ளதாக அப்பகுதி மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது.

அந்தவகையில் அமெரிக்காவின் 9/11 தாக்குதல்கள், செர்னோபில் வெடிப்பு, இளவரசி டயானாவின் மரணம், சோவிய ஒன்றியம் கலைப்பு, 2004 தாய்லாந்து சுனாமி மற்றும் பராக் ஒபாமாவிற்கு ஜனாதிபதி பதவி உள்ளிட்ட சம்பவங்களை பாபா வாங்கா முன்கூட்டியே கணித்து கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வரிசையில் பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. இந்த ஆண்டு உலகின் வெப்பநிலை குறைவதால், வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரிக்கும் என்றும், இந்தியாவில் விவசாய பயிர்களை தாக்கும் என்றும், பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதன் மூலம் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக பாபா வாங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் தற்போது பேசுபொருள் ஆகி இருக்கிறது.

அதேபோல் பாபாவின் கணிப்புகள் தொடர்பாக இணையத்தில் அதிகளவில் மக்கள் விவாதம் செய்ய தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே பாபா வாங்கா 2022ம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என கூறியிருந்தார்.

இதை நிரூபிக்கும் வகையில் இத்தாலி நாடு மிக மோசமான வறட்சியை சந்தித்தது. அதேப்போல் 2022ம் ஆண்டு ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் மழை வெள்ளம் ஏற்படும் என பாபா வாங்கா கணித்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாபா வாங்கா கூறி இருந்தது போல ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கனமழை மற்றும் வெள்ளம் வந்து பேரழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது என, சமூக வலைதளவாசிகள் அடித்து கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.