இறந்த நபருக்கு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ததால், இறுதிச்சடங்கை புறக்கணித்த கிராமத்தினர்! இது ஒடிசா சம்பவம்…

சம்பல்பூர்: ஒடிசா மாநிலத்தில் கல்லீரல் பாதிப்பு நோயால் இறந்த நபரின் உடலை தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ததால், அந்த நபரின் இறுதிச்சடங்கை கிராமத்தினர் புறக்கணித்த அவலம் அரங்கேறி உள்ளது. இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினர் இரு சக்கர வாகனத்தில் இறந்த நபரின் உடலை ஏற்றிச்சென்று இறுதிச்சடங்கு செய்தனர்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரால் இறந்தவர்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதால், ஒதுக்கிவைக்கப்படுவார்கள் என்று அஞ்சி, இறந்த நபரின்  உறவினர்கள் மற்றும் சமூகத்தினர், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளமறுத்ததால், இறந்த நபரின் உடலை, ஒரு நபர் தனது பைக்கில் வைத்து,  பர்காரில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இந்த சாதிய கொடுமை சம்பவம் ஒடிசாவின், பர்கர் மாவட்டத்தில் உள்ள பதம்பூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட மஹுல்பலி கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அறிந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த அங்கு வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

விசாரணையில்,  தினசரி கூலித் தொழிலாளியான முச்சுனு, நீண்டகாலமாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தவர். இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த வாரம் புர்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி முச்சுனு இறந்தார். இதையடுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, தனியார் ஆம்புலன்ஸில் சடலம் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுக்க குடும்பத்தினரிடம் பணம் இல்லை. மகுல்பாலி கிராமத்தைச் சேர்ந்த நேதாஜி யுபக் சங்கத்தினர் பர்லாவிடம் இருந்து உடலைக் கொண்டு வந்த பணத்தை சேகரித்தனர். இறந்த முச்சுனுவின் கர்ப்பிணி மனைவி, மூன்று வயது மகள் மற்றும் வயதான தாய். உடல் வந்ததும்,  “இறந்த தகவல் குறித்து அவரது சமூகத்தினருக்கும்,  உறவினர்களுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள யாரும்  வீட்டின் அருகே வரவில்லை என்று  நேதாஜி யுபக் சங்கத்தின் தலைவரான சுனில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சுனில் மற்றும் , ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பிற ஊழியர்களிடம் உடலை தகன மைதானத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்ட நிலையில்,  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் உடலை எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட போதிலும், தகனம் செய்வதற்கு வாகனம் செல்லக்கூடிய சாலை இல்லாததால் அவர்கள் வாகனத்தை நடுவழியில் நிறுத்த வேண்டியதாயிற்று.

இதையடுத்து சுனில் உடலை பைக்கில் ஏற்றி 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று நண்பர்களுடன் சேர்ந்து உடலை தகனம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், ஒடிசா மக்களிடையே சாதிய வேறுபாடுகள் எவ்வாறு உள்ளது என்பதையும் வெளிக்காட்டி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.